வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவரங்குளம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் புதுக்கோட்டையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதற்கு முன்னதாக பெய்த மழை மற்றும் பருவ மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை ஊராட்சி, மேலக்கொல்லையில் உள்ள பாசனகுளம் நிரம்பியதால் அண்ணா நகர், திருநகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story