கூடுதல் பஸ்கள் இயக்க கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
கூடுதல் பஸ்கள் இயக்க கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி பகுதிக்கு தர்மபுரியில் இருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, நாகாவதி அணை வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ்களில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி நேற்று மாணவர்கள் அரகாசனஅள்ளி பகுதியில் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story