இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலன், துணைச்செயலாளர் மகராஜ் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story