தமிழகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் 28 பேர் இடமாற்றம்


தமிழகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் 28 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2021 7:41 PM GMT (Updated: 26 Oct 2021 7:41 PM GMT)

தமிழகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் 28 பேர் இடமாற்றம்

திருச்சி, அக்.27-
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 28 அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் கே.கோபால் பிறப்பித்துள்ளார். அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.எஸ்.வி.ஏ.மகாலிங்கம், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி.மலர்விழி ராமநாதபுரம் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலராகவும் (கணக்கு மற்றும் நிர்வாகம்), பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.மோகன் பெரம்பலூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலராக (கணக்கு மற்றும் நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுபோல அரியலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கே.ரகு அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக (ஊதிய வேலைவாய்ப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், நாகை, தேனி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள், மாவட்ட ஊராட்சி செயலர்கள் என 28 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story