கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிர்வாகிகள் நேரில் புகார்


கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிர்வாகிகள் நேரில் புகார்
x
தினத்தந்தி 27 Oct 2021 1:21 AM IST (Updated: 27 Oct 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிர்வாகிகள் நேரில் புகார் அளித்தனர்.

கும்பகோணம்:-

கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிர்வாகிகள் நேரில் புகார் அளித்தனர்.

ஒன்றியக்குழு கூட்டம்

கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், செந்தில் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சசிகலா, கவிதா ஸ்ரீதர், சுப்பு அறிவழகன், கண்ணகி கண்ணன், மாரியம்மாள், சித்ரா பரமசிவம், காமராஜ், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் அழகு சின்னையன், ஒன்றிய துணை பொதுச்செயலாளர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பரத் உள்ளிட்டோர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜனை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அ.தி.மு.க.வினர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறுகையில்,
‘ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டங்களில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க ஒன்றியக்குழு தலைவர் அனுமதி அளிக்கவில்லை. உறுப்பினர்கள் பேசுவதற்கு ‘மைக்’ வசதி ஏற்பாடு செய்யவில்லை.
தற்போது நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து உடனடியாக பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுதொடர்பான புகார் மனுவையும் அ.தி.மு.க.வினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

தீர்வு காண நடவடிக்கை

இதனைத்தொடர்ந்து கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன் மற்றும் ராஜன் ஆகியோர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story