இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சுரண்டையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரண்டை:
கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுரண்டை அண்ணா சிலை முன்பு தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாநில இந்து முன்னணி செயலாளர் குற்றாலநாதன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் ராம ராஜா, மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், சுரண்டை நிர்வாகிகள் தீபம் செந்தில்குமார், சங்கரநாராயணன், சுந்தரகுமார், இசக்கி முத்து, அருணாசலம், சரவண வேல் முருகையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story