1-ந் தேதி உள்ளூர் விடுமுறை


1-ந் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 26 Oct 2021 10:34 PM GMT (Updated: 26 Oct 2021 10:34 PM GMT)

1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாட்டுடன் குமரி இணைந்த நாளினை முன்னிட்டு அன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அன்றைய உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-ந் தேதியன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டத்தின் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 1-ந் தேதியன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story