பெருங்களத்தூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


பெருங்களத்தூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2021 4:15 AM GMT (Updated: 2021-10-27T09:45:17+05:30)

பெருங்களத்தூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர்-வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு விசாரித்தனர். அதில் இறந்து கிடந்தவர், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திவானி ராம் (வயது 50) என்பதும், மின்சார ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானதும் தெரிந்தது.

இதேபோல் பல்லாவரம்-குரோம்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

அவரது கையில் ‘பாலன் பாப்பாத்தி’ என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story