கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி - இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி - இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 3:35 PM IST (Updated: 27 Oct 2021 3:35 PM IST)
t-max-icont-min-icon

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், திருத்தணி நகர தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளான இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இதில், மாநில பொதுச்செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Next Story