மெஞ்ஞானபுரம் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தைக்கு போலீசார் வலைவீச்சு


மெஞ்ஞானபுரம் அருகே  மகனை அரிவாளால் வெட்டிய தந்தைக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Oct 2021 1:09 PM GMT (Updated: 2021-10-27T18:39:47+05:30)

மெஞ்ஞானபுரம் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்

மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அச்சம்பாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் பழையகாரன். இவரது மகன் சின்னத்துரை (வயது 19).  இவரது தாயார் சுமார் 8  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  இந்த நிலையில் சின்னத்துரை அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாகவும்,  அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் தந்தையிடம் கூறியுள்ளார். இதற்கு பழைய காரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில்  சின்னத்துரையை பழையகாரன் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். காயமடைந்த சின்னத்துரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழையகாரனை தேடிவருகின்றனர். 

Next Story