தேனிலவு படகு இல்லத்தில் குதிரை சவாரிக்கு இடம் தேர்வு
ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க தேனிலவு படகு இல்லத்தில் குதிரை சவாரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க தேனிலவு படகு இல்லத்தில் குதிரை சவாரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
குதிரை சவாரி
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர். குதிரை சவாரி நடத்த தொழிலாளர்கள் 18 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்காக படகு இல்ல வளாகத்தில் குதிரைகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் படகு இல்லம் திறக்கப்படா போது, தொழிலாளர்கள் படகு இல்ல சாலையில் குதிரைகளை நிறுத்தி சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து சென்று வந்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறு
ஆனால் வார விடுமுறை நாட்கள், சீசன் நேரங்களில் சாலையில் குதிரைகளில் சவாரி செய்வதால் அரசு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் மீது குதிரைகள் மோதி காயம் ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் சாலையில் குதிரை சவாரி செய்யக்கூடாது, இதற்காக தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி படகு இல்ல வளாகத்துக்குள் ஏரியை ஒட்டிய நடைபாதையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு தொழிலாளர்கள் சவாரி நடத்த மறுத்துவிட்டனர்.
இடம் தேர்வு
தற்போது குதிரைகள் நிறுத்தும் இடத்தில் சுற்றுலா பயணிகள் குதிரை மீது அமர்ந்து புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது. படகு இல்ல வளாகத்தில் குதிரை சவாரி மேற்கொள்ளக்கூடாது என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், சாலையில் தொடர்ந்து குதிரை சவாரி மேற்கொண்டு வருவதால் மாற்று இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஊட்டி தேனிலவு படகு இல்ல பகுதியில் குதிரை சவாரி மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு அனுமதி பெற்றவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. குதிரைகளை நிறுத்த, அதன் மீது சுற்றுலா பயணிகள் ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story