ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம்
தடுப்பு சுவர் கட்டும் பணியால் மண் மூடி கிடக்கும் ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்
தடுப்பு சுவர் கட்டும் பணியால் மண் மூடி கிடக்கும் ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேறு இடத்தில் வீடுகள்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் சுறா குப்பம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் ஆற்றங்கரையில் அமைந்து உள்ளன.
இதனால் பருவமழையின்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.இதை கருத்தில் கொண்டு பெரும்பாலானோருக்கு, கேந்தி பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனினும் சிலருக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
தடுப்பு சுவர்
இந்த நிலையில் ரெயில்வே மூலம் ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. அப்போது தோண்டி எடுக்கப்படும் மண்ணை ஆற்றங்கரையில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கொட்டப்படும் அதிக அளவிலான மண் காரணமாக ஆற்றின் ஒரு பகுதி மூடி கிடக்கிறது.
இதனால் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டு உள்ளது. தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
கோரிக்கை
பலத்த மழை பெய்யும்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அருகில் உள்ள வீடுகளுக்குள் அதிக அளவிலான தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே ஆற்றில் கொட்டப்பட்டு உள்ள மண்ணை அகற்றி நீரோட்டம் சீராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story