மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே பெண்ணை கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் குழந்தைகள் கல்வி கற்க அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான குழந்தைகள் கல்வி கற்று வந்தனர்.
இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பாலாப்பள்ளியில் மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது வருகிற 1-ந் தேதி முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பாலாப்பள்ளியில் இருந்து பெண்ணைக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி வழியாக குழந்தைகள் நடந்து வர வேண்டி உள்ளது.
இதனால் பாலாப்பள்ளிக்கு தொடக்கப்பள்ளியை மாற்ற வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்காலிகமாக பள்ளியை நடத்த 2 வீடுகளையும் வழங்கினர். அந்த வீடுகளையும், பள்ளிக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்படும் இடத்தையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் குழந்தைகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். ஆய்வின்போது கூடலூர் வட்டார கல்வி அலுவர் வெள்ளியங்கிரி, தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story