கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர்
மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஊட்டி
மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாலியல் பலாத்காரம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எப்பநாட்டில் உள்ள கொரநூல் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகர் என்ற சதீஷ்(வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும், 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.
இதையடுத்து தனியாக இருக்கும்போது மாணவியின் வீட்டுக்கு சதீஷ் அடிக்கடி சென்று வந்ததுடன், வெளியிடங்களுக்கும் அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
6 மாத கர்ப்பிணி
இதற்கிடையில் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவள் 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவளிடம், தாயார் விசாரித்தார். அப்போது சதீஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிவித்தாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோவில் கைது
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் மாணவியுடன் பழகி ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து சதீஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story