விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிர் கடன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதி உள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5,825 விவசாயிகளுக்கு ரூ.30.46 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் பெற்று கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பயன் பெறலாம்
எனவே, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். மேலும், உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர் கடன் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story