100 நாள் வேலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் நூறு நாள் வேலைத்தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சட்டப்படியான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். இந்த திட்டத்தை தளி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். கொரோனா கால நிவாரணமாக விவசாயத்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், உடுமலை கமிட்டியின் சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் எம்.ரங்கராஜ் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் சி.முத்துச்சாமி, எம்.ரமேஷ், ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச்செயலாளர் என்.சுப்புலட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story