தேசிய தரமதிப்பீட்டு குழு ஆய்வு
பழனி அரசு மருத்துவமனையில் தரமதிப்பீட்டு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பழனி:
பழனி பஸ்நிலையம் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டு வருவதால் பழனி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும் என்று பழனி பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் நேற்று பழனி அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தனர். தரமதிப்பீட்டு குழு மாநில அலுவலர்கள் ஜெயந்தி, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மாவட்ட இணை இயக்குனர் அன்புச்செல்வன், பழனி மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார், சதீஷ்பாபு, சித்தா டாக்டர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்றார்.
Related Tags :
Next Story