புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரிகள் உள்பட 16 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு


புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரிகள் உள்பட  16 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2021 11:20 PM IST (Updated: 27 Oct 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரிகள் உள்பட 16 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை:
கல் குவாரிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரிகள் உள்பட சில குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது அபராதம் விதித்துள்ளனர். 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து புதுக்கோட்டை வந்து கல் குவாரிகளில் ஆய்வு நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரிகள் உள்பட 16 குவாரிகளில் 2 குழுக்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கனிம வளங்கள்
இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ``குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளனர். ஆய்வுக்கு 2 குழுக்களில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ஆய்வு தொடர்பாக சென்னையில் துறையின் இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்'' என்றனர்.

Next Story