பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு


பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2021 5:54 PM GMT (Updated: 2021-10-27T23:24:28+05:30)

கீழச்சிவல்பட்டி பகுதியில்உள்ள பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பது குறித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இதில் திருப்பத்தூர் ஒன்றியம், கீழச்சிவல்பட்டி பகுதியில் 3 விண்ணப்பங்கள் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு உரிமம் பெற விண்ணப்பம் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று கோட்டாட்சியர் பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், ஓய்ரோடு, அச்சாரம்பட்டி, நாகப்பன்பட்டி விலக்கு பகுதியில் உள்ள 3 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் கடையின் வெளியே டிரம்மில் தண்ணீர் வைக்கவேண்டும். மண்வாளி அமைக்கவேண்டும். அவசரமாக வெளியேறும் வழி அமைத்தல், தீயணைப்பான் கருவி வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜபாண்டி, வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story