கபிலர்மலை அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திடீர் சாவு


கபிலர்மலை அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2021 11:51 PM IST (Updated: 27 Oct 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

கபிலர்மலை அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திடீர் சாவு

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே பெருச்சா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 52). இவர் சிறுநல்லிக்கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வந்தார். இவருடைய மனைவி ஜோதிமணி. இவர் அதே ஊராட்சியில் தலைவராக உள்ளார். இவர்கள் தற்போது கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாய் பழனியம்மாளை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது அண்ணன் நாகராஜ் வீட்டிற்கு கணவன், மனைவி சென்றனர். பின்னர் பழனியம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக அண்ணன் நாகராஜனிடம், வேலுச்சாமி கூறியுள்ளார். அப்போது அண்ணன், தம்பி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
அந்தசமயம் திடீரென வேலுச்சாமி மயங்கி விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி ஜோதிமணி, கணவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து ஜோதிமணி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையம், சிறுநல்லிக்கோவில் ஊராட்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story