கலவை அரசு மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம்


கலவை அரசு மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 11:55 PM IST (Updated: 27 Oct 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

கலவை அரசு மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம்

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில், திமிரி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளும் உள்ளனர். இங்கு சித்த மருத்துவமனையும் உள்ளது. கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்ததால் மருத்துவமனையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால்  மருத்துமனை வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
 
இதனால் செவிலியர்கள், உள்நோயாளிகள் பயத்துடன் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நல்ல பாம்பு ஒன்று மருத்துவமனை உள்ளே வந்தது. தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர். எனவே மருத்துமனையை சுற்றியுள்ள புதர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story