பஸ்சில் ஏறியபோது பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
பஸ்சில் ஏறியபோது பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சந்திரா (வயது 47). இவர் நேற்று மாலை பெருமத்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் தூக்க காரியத்திற்கு செல்வதற்காக பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது மர்மநபர் ஒருவர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சந்திரா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழைய பஸ் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story