மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.6,500 சம்பளம் வழங்க வேண்டும்; ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்


மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.6,500 சம்பளம் வழங்க வேண்டும்; ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:05 PM GMT (Updated: 27 Oct 2021 7:05 PM GMT)

மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500 சம்பளம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர், 
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் சங்கப்பிள்ளை தலைமை தாங்கினார். மாநில தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள், சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பதவி உயர்வு
மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500 சம்பளம் வழங்க வேண்டும். மேலும் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்.  பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டும் பல மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை. 
தேர்தல் வாக்குறுதிபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.7,100 வழங்க வேண்டும். பி.எப். கணக்கு தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story