டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
40 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
டாஸ்மாக் உள்ளிட்ட மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் என தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்ததை கண்டித்தும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்கக்கோரி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மஸ்ரீகாந்தன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தையல் சங்கம் ஹோச்சுமின், தரைக்கடை வியாபாரிகள் சங்கம் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story