100 நாள் வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் 100 நாள் வேலை தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 நாள்வேலை தொழிலாளர்கள் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நகர்ப்பகுதியில் விரிவுப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலை முழுவதும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story