சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது
மீன்சுருட்டி
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி புளியடி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீன்சுருட்டி பகுதியில் நடைபெற்ற சந்தைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்றவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story