பெற்றோரின் கடன்சுமையால் தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை


பெற்றோரின் கடன்சுமையால் தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 1:05 AM IST (Updated: 28 Oct 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோரின் கடன் சுமையால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரியாங்குப்பம் அக்.28- 
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் டோல்கேட், அரவிந்தர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43).  மினி லாரி வைத்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோசலைதேவி. தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். 
இந்த நிலையில் கோசலைதேவி பல்வேறு தனியார் வங்கிகளில் சுயஉதவி குழுக்களின் மூலம் பல லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திகேயனுக்கு தொழிலில் போதுமான வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வந்துள்ளார். குடும்பமே கடன் சுமையால் அவதிக்குள்ளானது.
வாங்கிய கடனுக்காக வீட்டிற்கு தொடர்ந்து வந்து குழு நிர்வாகிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் பணத்தை திருப்பி செலுத்தும்படி தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கோசலையின் மகன் ரோகித் கவலையுடன் இருந்துள்ளான். 
இந்த நிலையில் நேற்று காலை கார்த்திகேயன் தனது மனைவியை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ரோகித் வீட்டில் தனது தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். 
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், அக்கம்பக்கத்தினர் உதவியோடு ரோகித்தை தூக்கில் இருந்து இறக்கி, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இது குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story