வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஓராண்டு சிறை
வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி, அக்.28-
வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய அண்ணன், தம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வரதட்சணை பிரச்சினை
புதுவை உழவர்கரை பகுதியை சேர்ந்த தாசன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2012-ல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதற்கிடையே மணமகன் வீட்டார் தரப்பில், தாசனுக்கு பிரெஞ்சு குடியுரிமை கிடைக்க இருப்பதாக கூறி பெண் வீட்டாரிடம் கூடுதல் வரதட்சனண மற்றும் நகைகளை கேட்டுள்ளனர். ஆனால் அதனை பெண் வீட்டார் கொடுக்க முடியாததால் திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்திவிட்டனர்.
ஓராண்டு சிறை
இதுகுறித்து பெண்ணின் உறவினர் வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாசன், அவரது அண்ணன் நாகராஜ் ஆகியோர் மீது வரதட்சணை உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தாசன், அவரது அண்ணன் நாகராஜ் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜரானார்.
Related Tags :
Next Story