துப்பறியும் பிரிவுக்கு புதிய நாய்க்குட்டி


துப்பறியும் பிரிவுக்கு புதிய நாய்க்குட்டி
x
தினத்தந்தி 28 Oct 2021 1:42 AM IST (Updated: 28 Oct 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர போலீசில் துப்பறியும் பிரிவுக்கு புதிய நாய்க்குட்டி வழங்கப்பட்டு உள்ளது.

நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணிக்காக பிறந்து 40 நாட்களே ஆன ‘லேப்’ வகை புதிய நாய்க்குட்டி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நாய் குட்டி நேற்று முதல் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுது. இதையொட்டி நாய் படை பிரிவினர், புதிய நாய்குட்டியை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் காண்பித்தனர். அப்போது அவர், புதிய நாய்குட்டியை பார்வையிட்டு அதற்கு 'ரெமோ' என பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமார் உடனிருந்தார்.

Next Story