காந்திமதி யானைக்கு குளியல் தொட்டி; பூமி பூஜையுடன் பணி தொடங்கியது
நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு குளியல் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜையுடன் பணி தொடங்கியது.
நெல்லை:
தமிழக அரசு முக்கிய கோவில்களில் உள்ள யானைகள் வசதிக்காக பிரமாண்ட குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி யானை குளிப்பதற்காக கோவிலின் வசந்த மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காந்திமதி சமேத நெல்லையப்பர் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் பிரமாண்ட குளியல் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதைெயாட்டி கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் சுவாமி பக்தானந்தா தலைமை தாங்கினார். இதில் கோவில் சூப்பிரண்டு கவிதா, தொழில் அதிபர்கள் காசி விசுவநாதன், மூகாம்பிகை சிதம்பரம், குணசீலன், முன்னாள் மண்டல தலைவர் வெங்கடசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் கோபி என்ற நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story