3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2021 9:36 PM GMT (Updated: 27 Oct 2021 9:36 PM GMT)

நித்திரவிளைஅருகே 2 கார்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொல்லங்கோடு:
நித்திரவிளைஅருகே 2 கார்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வாகன சோதனை
குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் அப்துல்லா மன்னன் தலைமையில் துணை தாசில்தார் குழந்தை ராணி நாச்சியார், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் நித்திரவிளை அருகே மங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதிகாரிகள் நிற்பதை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார்.
இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை சோதனையிட்ட போது அதில் சிறு, சிறு மூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை, பருப்பு போன்றவை இருந்தன. விசாரணையில் இந்த பொருட்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
மேலும் 2 டன்
அதிகாரிகள் சோதனையிட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக மற்றொரு சொகுசு காரும் வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை காட்டினர். உடனே, டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். 
அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்த போது அதிலும் சிறு, சிறு மூடைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசியும் கேரளாவுக்கு கடத்தி ெசல்ல முயன்றது தெரிய வந்தது. 
தொடர்ந்து அதிகாரிகள் 3 டன் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருட்கள் காப்புக்காட்டில் உள்ள குடோனிலும், வாகனங்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story