கல்லூரி மாணவர் பலி


கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 27 Oct 2021 9:46 PM GMT (Updated: 27 Oct 2021 9:46 PM GMT)

தக்கலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்:
தக்கலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி மோதல்
தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தக்கலை அழகர் அம்மன்கோவில் அருகே உள்ள நர்சரி கார்டன் பகுதியில் சென்றபோது, எதிரே பாறாங்கற்கள் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த வாலிபர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் வாலிபர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. 
வாலிபர் சாவு
இந்த விபத்தில் வாலிபரின் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதற்கிடையே லாரி டிரைவர் வாகனத்தை அங்கேேய நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார்.  
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள்  தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில்  பரிதாபமாக இறந்தார். 
சிம்கார்டு மூலம்...
இதையடுத்து இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், வாலிபரின் பெயர், ஊர் விவரங்கள் முதலில் தெரியாமல் இருந்தது. இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாலிபரின் சிம்கார்டில் பதிவாகி இருந்த எண்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். 
அப்போது இறந்த வாலிபர் நாகர்கோவில் குருசடியை சேர்ந்த அமர்நாத் வில்லிங்ஸ்டன் மகன் ஷஜின் (வயது 21) என்பதும், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு புகைப்படம் எடுக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஒரு விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. 
 இதற்கிடையே தகவல் அறிந்த வாலிபரின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
 சோகம்
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தாழத்து குளக்கடாவை சேர்ந்த சந்தோஷ் (41) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story