வரி கட்டணத்தை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினந்தோறும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும். பகுதி மற்றும் தலைமை அலுவலக வசூல் மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும்.
நிலுவைத் தொகையை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். 200 பணிமனைகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி வரி செலுத்துவதற்கு ஏதுவாக நவீன எந்திர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story