அனைத்து பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும்


அனைத்து பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 28 Oct 2021 8:37 PM IST (Updated: 28 Oct 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

நிதி கிடைத்தவுடன் அனைத்து பணிகளும் விரைந்து செயல்படு்த்தப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி:
நிதி கிடைத்தவுடன் அனைத்து பணிகளும் விரைந்து செயல்படு்த்தப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தெரிவித்தார். 
ஒன்றியக்குழு கூட்டம் 
திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர்  ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதி்ல் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
ஞானமோகன்(இ.கம்யூனி்ஸ்டு): பாமணி ஊராட்சி தேசிங்கு ராஜபுரம், அத்திமடை வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும். 
பக்கிரியம்மாள் ராஜேந்திரன்(தி.மு.க.): கச்சனம் ஊராட்சியில் தரமான பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அருகிலேயே கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்.  பிள்ளையார்கோவில் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.
சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்
சரஸ்வதி ராமகிருஷ்ணன்(தி.மு.க.): ஆதிரங்கம் சேகல் சாலையை சீரமைக்க வேண்டும். ஆதிரங்கம் ஊராட்சியில்  சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். கொருக்கை ஆதிரங்கம் சாலையை சீரமைக்க வேண்டும்.
ஆரோக்கியமேரி(தி.மு.க.): வரம்பியம் ஊராட்சியில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மடப்புரம் நடுத்தெரு சாலையை சீரமைக்க வேண்டும். வடிகால் வசதி செய்து தரவேண்டும்.
முருகேசன்(அ.தி.மு.க.): மணலி ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை புதுப்பித்து தரவேண்டும். இல்ைலயெனில் புதிய வீடு கட்ட வேண்டும்.
மாரியம்மாள்(இ.கம்யூனிஸ்டு): மேலமருதூரில் மயான சாலையை சீரமைக்க  வேண்டும்.
அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும்
ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர்: அரசிடமிருந்து வரும் நிதி போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் நிதி வழங்க மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன். நிதி கிடைத்தவுடன் அனைத்து பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்ய நாட்களை நீட்டிப்பு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு உள்ள பயிர் இன்சூரன்ஸ் தொகையை விடுபடாமல் வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்தும் நிறைவேற்றப்படும். 
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 
கூட்டத்தில் பொறியாளர்கள் சூரியமூர்த்தி, வெங்கடேசன், மேலாளர் ராஜலட்சுமி,  அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story