புலிமேடு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது
புலிமேடு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது
வேலூர்
வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் ஊசூர் அருகே புலிமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் அருவி உள்ளது. இதனை புலிமேடு நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மேலும் அப்பகுதி மலைப்பகுதி என்பதால் குளிர்ந்த காற்று வீசுகிறது.
வேலூர் மாநகர பகுதியில் இருந்து மிக அருகில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு எளிதில் சென்று வரும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story