காவலர் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வுகாண வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவு


காவலர் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வுகாண வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவு
x

ராணிப்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வுகாண அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வுகாண அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டார்.

ஒரு வாரத்தில் தீர்வு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். அப்போது பல நாட்களாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருவதாகவும், தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை என்றும் குடியிருப்புவாசிகள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். 

அதற்கு குடியிருப்பு வளாகத்தில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு தண்ணீர் இல்லாமல் நின்று விட்டது எனவும், மின் விளக்குகள் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் காவலர் வீட்டுவசதி வாரிய உதவி பொறியாளர் தெரிவித்தார்.
அதற்கு காவலர் குடியிருப்புகளில் உள்ள பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் இருந்தால் தன்னுடைய நேரடிப் பார்வைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

விளையாட்டு மைதானம்

பின்னர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு மைதானம் கேட்டனர். அதற்கு அங்குள்ள காலி மைதானத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு விளையாட்டு மைதானம் ஏற்படுத்திக் கொடுக்க நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். 
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா, நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story