கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி,
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரிஷிவந்தியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு சமூகத்தை சேர்ந்த வினிதா என்பவர், பொய்யான சாதிச்சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவரது சாதி சான்றிதழை ரத்து செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை, கலெக்டரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரிஷிவந்தியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி (தனி) எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் வேறு சமுகத்தை சேர்ந்த வினிதா என்பவர், எஸ்.சி. என சாதிச்சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது சாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து அறிந்து, சாதி சான்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story