திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
சப்-கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென சாரை பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்ததும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தேடினர். அலுவலகக் கட்டிட ஜன்னலில் இருந்து சாரை பாம்பு மேற்கூரை ஓடுகளில் நுழைந்து மறைந்து கொண்டது. பாம்பை பிடிக்க வேண்டும் என்றால் மேற்கூரைைய பிரிக்க வேண்டும் என தீயணைப்புத்துறையினர் கூறினர்.
அதற்கு அதிகாரிகள் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து பல மணி நேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. தீயணைப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Related Tags :
Next Story