காற்று தர அளவீட்டு கருவி மூலம் ஆய்வு


காற்று தர அளவீட்டு கருவி மூலம் ஆய்வு
x
தினத்தந்தி 28 Oct 2021 11:42 PM IST (Updated: 28 Oct 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஒலி மாசு குறித்து கண்டறிய காற்று தர அளவீட்டு கருவி மூலம் ஆய்வு

திருப்பூர்
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்  திருப்பூரில் குமரன் வணிக வளாகம் மற்றும் ராயபுரத்தில் உள்ள பறக்கும் படை அலுவலகம் ஆகியவற்றில் காற்று தர அளவீட்டு கருவி வைக்கப்பட்டு ஆய்வு தொடங்கியது.  
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது “ காற்றில் மிதக்கும் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் (பி.எம்10), 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் (பி.எம். 2.5), சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, அலுமினியம், பேரியம், இரும்பு தாதுக்கள் அளவுகள் கணக்கிடப்பட உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த ராயபுரத்தில் ஒலி மாசு கணக்கிடப்பட்ட உள்ளது.  பண்டிகைக்கு முன்பு மற்றும் பண்டிகை நாள், பண்டிகைக்கு பின் பதிவாகும் அளவு அடிப்படையில், திருப்பூரில் காற்றை மாசுபடுத்தும் பட்டாசு ரகங்கள் அதிகம் வெடிக்கப்படுகிறதா? காற்று மாசு எந்த அளவு அதிகரித்துள்ளது? என்பது குறித்து கண்டறியப்படும் என்றனர். 

Next Story