ஓடும் ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்


ஓடும் ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:49 PM IST (Updated: 28 Oct 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்

காங்கேயம்
காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வருபவர் செல்வம். இவரது மனைவி பெரியக்கா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை 7 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக  ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியக்காவை நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலேயே அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெகதீஷ்குமார், மருத்துவ உதவியாளர் சபாபதி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தாயையும் குழந்தைையயும் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். 

Next Story