சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்


சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2021 12:19 AM IST (Updated: 29 Oct 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புதிதாக சாலை அமைக்க கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும், விரைந்து சாலையை சீரமைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கூறி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story