குமரன் ரோட்டில் பாதசாரிகளின் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைப்பு


குமரன் ரோட்டில் பாதசாரிகளின் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 12:19 AM IST (Updated: 29 Oct 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் குமரன் ரோட்டில் பாதசாரிகளின் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் குமரன் ரோட்டில் பாதசாரிகளின் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 
இரும்பு தடுப்புகள் அமைப்பு 
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிக்கை நெருங்கிய நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு ஆர்வமாக வந்த வண்ணம்  உள்ளனர்.
இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஆடையகங்கள், பட்டாசு கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட கடைகளில்  பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுபோல் மாநகர் பகுதிகளில் குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. 
வாகனங்களின் வருகை அதிகமாக இருப்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனால் குமரன் ரோட்டில் சாலையின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்ல வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இருசக்கர வாகனங்கள் 
இந்த இரும்பு தடுப்புகளின் உள்பகுதியில் பாதசாரிகள் நடந்த செல்லவும், வெளிபகுதிகளில் வாகனங்கள் செல்லும் வகையிலும் இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று தான் இந்த இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த இரும்பு தடுப்புகள் உள்ளே இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவைத்துள்ளனர். 
இவ்வாறு இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிலர் சாலைகளிலும், சிலர் இரும்பு தடுப்பு உள்ளேயும் சிறுவர், சிறுமிகளுடனும் நடந்து வருகிறார்கள். 
எனவே போலீசார் இதனை முறையாக கண்காணித்து இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி பாதசாரிகள் எந்த வித சிரமமும் இல்லாமல் நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story