திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்


திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 29 Oct 2021 12:20 AM IST (Updated: 29 Oct 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கட்டுமான நிறுவன அதிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

விருதுநகர்,

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கட்டுமான நிறுவன அதிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம்பெண் பலாத்காரம்

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் கட்டுமான நிறுவனம் வைத்திருப்பவர் கவியரசு. இவரது நண்பர் மகேந்திரன். இவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை கவியரசுக்கு அறிமுகப்படுத்தினார். கவியரசு ஏற்கனவே காதல் தோல்வியால் மன வருத்தத்தில் இருந்த நிலையில் மகேந்திரன் அறிமுகப்படுத்திய பெண்ணிடம் தான் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 இதனை தொடர்ந்து பலமுறை அந்த பெண்ணை அலுவலகத்திற்கும் சூலக்கரையில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு அந்த இளம்பெண்ணை செல்போனில் படமெடுத்து வைத்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது, இந்நிலையில் இதுபற்றி அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவர் கவியரசு அழைக்கும்போது வர மறுத்தபோது வராவிட்டால் ஆபாச படத்தை வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

போலீசில் புகார்

 இதனை தொடர்ந்து இதுபற்றி அப்பெண் கவியரசின் தந்தை வெங்கடேஷுக்கு செல்போனில் தானும் கவியரசும் சேர்ந்து இருக்கும் போட்டோவை அனுப்பி கவியரசு தன்னை திருமணம் செய்ய உறுதி அளித்த நிலையில் தற்போது மறுப்பதாக தெரிவித்துள்ளார். 
அதற்கு வெங்கடேஷும் அந்த பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பெண் கவியரசிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது கவியரசு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
இதனை தொடர்ந்து அப்பெண் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கவியரசு மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story