குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் சாமி தரிசனம்


குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 Oct 2021 12:35 AM IST (Updated: 29 Oct 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலில் தெலுங்கானா கவர்னர் சாமி தரிசனம் செய்தார்

பெருமாநல்லூர்
தெலுங்கானா மாநில கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுனராகவும் பொறுப்பு வகித்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன்.  இவருடைய  குலதெய்வ கோவிலான  மகா பெரியசாமி கோவில் பெருமாநல்லூரை அடுத்த தட்டான் குட்டையில்  உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழிசை சவுந்தரராஜன், அவருடைய கணவர் சவுந்தரராஜன், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வந்தனர். 
கோவிலுக்கு வந்த தெலுங்கானா கவர்னரை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பா.ஜனதா மாநில பொது செயலாளர் ஜி.கே. செல்வக்குமார், மாநில செயலாளர் மலர்கொடி மற்றும் நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றனர். சாமி தரிசனம் முடிந்ததும் அவர்கள் புறப்பட்டு சென்றனர். தெலுங்கானா கவர்னர் வருகையையொட்டி அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story