புதுச்சேரி கட்டிட பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு


புதுச்சேரி கட்டிட பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு
x
தினத்தந்தி 29 Oct 2021 1:08 AM IST (Updated: 29 Oct 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000, கட்டிட பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு கூப்பன் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்

புதுச்சேரி, அக்.29-
தீபாவளியை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000, கட்டிட பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு கூப்பன் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
வங்கிக்கணக்கில் பணம்
அந்த வகையில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு இலவச கைலி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு தலா ரூ.500 வீதம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 412 பேருக்கு மொத்தம் ரூ.6 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் அவரவர் வங்கிக்கணக்கில்  வரவு    வைக்கப்பட உள்ளது.
இந்த    நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் யஷ்வந்தையா கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.3 ஆயிரம் பரிசு கூப்பன்
கட்டிட தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு      ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000-க்கான பரிசு கூப்பனும், கட்டிட தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான பரிசு கூப்பனும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.12 கோடி கூடுதல் செலவு
முதல்-அமைச்சர்     ரங்க சாமியின் இந்த அறிவிப்பால் 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு ரூ.12 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
தீபாவளி   பண்டிகைக்கு உதவித்தொகை வழங்குமாறு அமைப்புசாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இத்தகைய சூழலில் தற்போது அவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு பரிசுக்கூப்பன் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
______


Next Story