வில்லியனூர் போலீஸ் ஏட்டு மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மதிப்பெண்ணை திருத்தி மோசடி செய்ததாக வில்லியனூர் போலீஸ் ஏட்டு மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, அக்.29-
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மதிப்பெண்ணை திருத்தி மோசடி செய்ததாக வில்லியனூர் போலீஸ் ஏட்டு மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பதவி உயர்வுக்கு முறையீடு
புதுச்சேரி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நடந்தபோது அதில் பங்கேற்று எழுதினார்.
ஆனால் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாண்டியன் கேட்டு பெற்றார். அதன் மூலம் தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென காவல்துறை தலைமையகத்தில் முறையிட்டார்.
இதையடுத்து அவரின் கோப்புகளை ஆய்வு செய்தபோது, ஏட்டு பாண்டியன் 2004-ம் ஆண்டு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண் 57 என்று இருந்ததை 87 என்று திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பிரிவுகளில் வழக்கு
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் குணாளன் சதீஷ், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி ஏட்டு பாண்டியன் மோசடியில் ஈடுபட்டதாக 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பாண்டியன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
_____
Related Tags :
Next Story