செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 1:53 AM IST (Updated: 29 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே துரைச்சாமிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி அருகே ஒரு தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஏற்கனவே பணி கிடப்பில் போடப்பட்டது. 
இந்த நிலையில் அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், யூனியன் கவுன்சிலர் மாரிச்செல்வி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். 
இதையடுத்து இலத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து, பொதுமக்கள் மற்றும் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story