வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
செங்கோட்டை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 70). இவருக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதனால் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சாகுல் ஹமீது தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்தையா மகன் முருகன் (40). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் குறித்து செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story