ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 400 பேரிடம் ரூ.22 கோடி மோசடி - 2 பேர் கைது
மைசூருவில் ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 400 பேரிடம் ரூ.22 கோடி மோசடி செய்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு:
போலீசார் விசாரணை
மைசூரு மண்டிமொகல்லாவில் ரெயில் நிலைய பகுதியில் ரெயில்வே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தனர். அவர்கள் ரெயில் நிலையம், மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றை படம் பிடித்தப்படி இருந்தனர்.
இதுகுறித்து ரெயில் மருத்துவமனை கண்காணிப்பாளர், மைசூரு ரெயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து, ரெயில்வே மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
அதன் விவரம் பின்வருமாறு:-
ரெயில்வேயில் வேலை வாங்கி...
பிடிபட்டவர்களில் ஒருவர் மைசூருவை சேர்ந்த சந்திரகவுடா எஸ்.படேல் (வயது 44) என்பதும், மற்றொருவர் கதக் மாவட்டத்தை சேர்ந்த சிவசாமி (62) என்பதும், இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார்.
இவர்கள் 2 பேரும் கூட்டு சேர்ந்து வாலிபர்களிடம் மைசூரு டிவிஷன் ரெயில்வேயில் வேலை இருப்பதாகவும், அதற்கு தங்களுக்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பலரும் அவர்களிடம் பணம் கொடுத்துள்ளனர்.
ரூ.22 கோடி மோசடி
அதன்படி அவர்கள் 2 பேரும் 400 பேரிடம் இருந்து ரூ.22 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர். ரெயில்வே வேலைக்கு பணம் கொடுத்தவர்களுக்கு போலி ஆவணம் தயாரித்து பணி நியமன ஆணை வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த பணி நியமன ஆணை தயாரிக்க ரெயில்வே நிலையம் மற்றும் அதிகாரிகள் அறைகளை புகைப்படம் எடுத்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நிரப்பப்படாத 221 காசோலைகள், ரூ.4.15 லட்சம் ரொக்கம், வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் கல்விச் சான்றிதழ்கள், 100 போலி பணிநியமன ஆணைகள், டிக்கெட் பரிசோதகர்கள் சீருடையில் அணியும் 70 பெயர் பட்டைகள், போலி சான்றிதழ்கள், மடிக்கணினி, கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு
கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான 2 பேருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்துவருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மண்டிமொகல்லா போலீசார் வழக்கப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story