நன்னடத்தை உறுதிமொழியை மீறிய தந்தை, 2 மகன்களுக்கு 330 நாட்கள் சிறை தண்டனை


நன்னடத்தை உறுதிமொழியை மீறிய தந்தை, 2 மகன்களுக்கு 330 நாட்கள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 29 Oct 2021 11:08 AM IST (Updated: 29 Oct 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

நன்னடத்தை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட முயன்ற குற்றத்துக்காக தந்தை, 2 மகன்களை 330 நாட்கள் சிறையில் அடைக்க மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் திஷா மீத்தல் உத்தரவிட்டார்.

சென்னை மயிலாப்பூர் நொச்சிநகரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவருடைய மகன்கள் முருகன் (30), கார்த்திக் (23). இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் 3 பேரும் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் திஷா மீத்தலை கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சந்தித்து, தாங்கள் திருந்தி வாழப்போகிறோம். ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று அவரிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிகொடுத்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் நன்னடத்தை உறுதிமொழியை கடைபிடிக்க தவறிவிட்டனர். 

கத்தி, அரிவாள், நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றுடன் கடந்த மாதம் 27-ந்தேதி 3 பேரும் கைது செய்யப்பட்டனர். முருகேசனின் இன்னொரு மகன் சரவணன் (25) கடந்த ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மகனை கொன்ற கும்பலை பழிதீர்க்க சென்றபோது பிடிபட்டனர். இந்தநிலையில் நன்னடத்தை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட முயன்ற குற்றத்துக்காக முருகேசன் மற்றும் அவரது 2 மகன்களான முருகன், கார்த்திக் ஆகிய 3 பேரையும் 330 நாட்கள் சிறையில் அடைக்க மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் திஷா மீத்தல் உத்தரவிட்டார்.


Next Story